சீர்காழி திருக்கோலக்கா பகுதியில் செயல்படும் கிங்ஸ் குத்துசண்டை பயிற்சி மையத்தில் சார்பில் கடந்த மாதம் கோவையில் நடந்த மாநில குத்துசண்டை போட்டியில் பங்கேற்று தகுதி சுற்றில் முதலிடம் பெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் 11 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் அஸ்வந்த் வெற்றி பெற்று தங்கபதக்கமும், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பாலஹரிஷ், 34 கிலோ எடைபிரிவில் ரோகித், 32 கிலோ பிரிவில் குணா மற்றும் கோகுல் ஆகியோரும் வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.
5 தங்க பதக்கங்களை வென்று சீர்காழிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பயிற்சியாளர் பிரபாகரன் ஆகியோரை நல்லாசிரியர் விருதுபெற்ற ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெறவுள்ள அகில உலக அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.