திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதி பாளையம் பஞ்சாயத்து தலைவராக நாகேஸ்வரி சோமசுந்தரம் என்பவர் இருக்கிறார்.
இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் சாக்கடை தெருவிளக்கு போன்ற எந்த வசதிகளும் இங்கு இல்லை. நாய் தொல்லைகள் மிக அதிகம். இவற்றை கூறுவதற்கு பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் சென்றால், அங்கு பஞ்சாயத்து தலைவர் இருக்கையில், அவரது கணவரான சோமசுந்தரம் என்பவர் இருந்துகொண்டு, இங்க எல்லாமே நான்தான் என்னிடம் தான் குறைகளை கூற வேண்டும் என்று அதிகாரத் தோரணையில் பொதுமக்களை மிரட்டி வருகிறார். அவர்களுக்கு தேவையானவர்கள் மட்டும் வந்தால் அவர்களுக்கு வீட்டிற்கு வரச்சொல்லி கையொப்பம் போட்டுக் கொடுக்கிறார். மக்கள் ஒருவர் தனது மருத்துவ செலவிற்காக தனது நிலத்தை விற்பதற்கு தடையின்மை சான்று கேட்டிருக்கிறார். அதற்குத் தர மறுத்து செத்தால் சாகட்டும் என்றும் மனிதாபிமானமே இல்லாமல் அதிகாரத் தோரணையில் கூறிவருகிறார். 100நாள் வேலை திட்டத்திலும் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோன்று பல்லடம் ஙிஞிளி வில்சன் அவர்களிடம் பொதுமக்கள் கையெழுத்து வாங்க சென்றாலும் அவர் பொதுமக்களை பார்ப்பதையே தவிர்த்து தலைவரைப் பார்த்து விட்டு வாருங்கள் என்று என்று கூறி வருகிறார் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்துக்கொண்டு பொதுமக்களை அலைக்களித்து வருகிறார்கள். இங்கு நாங்கள் தான் ஆளும் கட்சி. அதிகாரி முதல் அமைச்சர் வரை நான் சொல்வதைத்தான் கேட்பார்கள், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிகார தோரணையில் பொதுமக்களை மிரட்டி வருகிறார். எனவே, மாவட்ட நிர்வாகம், தமிழக முதல்வர் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.