தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தின் தூய இருதயமாதா ஆலய பங்குதந்தை அருட்திரு.தேவசகாயம் அடிகளார் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலகோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது.இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் மிகவும் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்பொழுது பெய்த மழையில் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்து விட்டது. மிக பெரிய சம்பவங்கள் நடக்கும் முன்னரே கட்டிடத்தை மாற்றி பள்ளியில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
- Dr.வேதகுஞ்சருளன்