தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது தீண்டாமை எண்ணத்தில் செயல்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வரை புகார் கொடுத்ததாக சொல்லப்பட்டது. அதையடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர், தலைவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் வரை புகார் கொடுத்ததாக நமக்கு தகவல் வந்தது.
புகாரின் வரிகள், தீபாவளி திருநாளுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்று ஒரு பெரிய தொகையை எடுக்க, துணைத் தலைவரிடம் காசோலையில் கையெழுத்து போட சொல்லி மிரட்டியதாகவும், ஊழலுக்கு நான் துணை நிற்க மாட்டேன் என்று துணைத் தலைவர் மறுத்தாகவும், கையாடல் செய்ய முயற்சி செய்யும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்ததாக நமக்கு தகவல் வந்தது. ஆனால், பல முக்கிய நபர்கள் களத்தில் இறங்கி சமாதானம் செய்து வைத்து, கமிஷன் சதவிகிதத்தை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டதாக நமக்கு தகவல் வந்தது. தனியாக ஊழல் செய்யும் முயற்சி, இப்போது கூட்டமாக அரங்கேற, சமாதான பஞ்சாயத்து நடந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. தவறு நடந்து கொண்டு இருக்கின்றது. சமாதானத்தில் அதிக பங்கு ஊராட்சி செயலாளருக்கு உண்டு என்ற செய்தியும் நமக்கு வந்தது.
எப்படி பார்த்தாலும் அச்சதியில் தலைவரும், துணைத் தலைவரும் மாறி மாறி புகார் கொடுத்துள்ளார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடிக்கை பார்க்காமல், இருவரின் புகார் மீதும் நடவடிக்கை எடுப்பார்களா என்று ஊராட்சி மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
நாமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது சம்பந்தமாக வலியுறுத்த முயற்சி செய்ய தயாராகி வருகின்றோம்.
பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் நவக்கொல்லைக்காடு கிராமத்தில் உள்ள சுடுகாட்டின் அவலநிலை..?