தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவு படியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.மணிவேல் மற்றும் திரு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த ஒரே மாதத்தில் 15 கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு சக்கர வாகனம் உட்பட 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதனை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்கள் பண வெகுமதி வழங்கி அறிவுரை கூறி பாராட்டினார்.