தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு கடந்த ஆண்டு 2020 பிப்ரவரி மாதம் சார் ஆட்சியராக திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டார். தஞ்சை மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டை தாலுகாவில் தான் அதிகமாக இலவச பட்டா வழங்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. குளம், ஏரி, சுடுகாடு போன்ற பல பிரச்சனைகளை சுமூகமாக கையாண்டார். பிரச்சனை இருந்த ஊர் எல்லாம் சரி செய்து கொடுத்தார். சொக்கநாதபுரம் தரைப்பாலம், அன்டமி பாலம், பேராவூரணி ஆண்டவன் கோவில் பாலம் போன்ற பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.
கோட்டாட்சியர் அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம், இவர் வந்தவுடன், கூட்டரங்கு மற்றும் அலுவலகத்தை தலைமை இடத்தில் சொல்லி புதுப்பித்தார். கோட்டாட்சியர் குடியிருப்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் தான் குடியிருந்து வந்தார். அதையும் புதுப்பித்தார். புதிய கட்டிடம் கட்ட அனுமதி வாங்கினார்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் இடம் காலியாகவே இருந்தது. தேர்தல் தனி துணை வட்டாட்சியராக இருந்த தர்மேந்திரா அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் தேர்தல் துறைக்கு கடிதம் எழுதி அவரை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.
பட்டுக்கோட்டை மக்கள் குறைகளை எல்லாம் பார்த்த சார்ஆட்சியர் அவர்கள் மக்கள் குறைகளை தீர்க்க ஆட்சியர் மற்றும் தலைமை செயலகத்திற்கு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க முயற்சித்து வந்தார். திடீர் என அவருக்கு பணிமாறுதல் என்றவுடன் அனைத்து வட்டாட்சியர்களும் கோட்டாட்சியர் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
துணை வட்டாட்சியர் தர்மேந்திரா பொதுமக்களிடம் கனிவுடன் பேசி அவர்களுடைய குறைகளை கேட்டு அதற்கு என்ன வழிமுறைகள் என்பது பற்றி விளக்கம் அளிப்பதாக கோட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுவும் சார்ஆட்சியர் அவர்களுக்கே பெருமை. தற்போது ஆர்டிஓ வாக வந்திருக்கும் பிரபாகர் அவர்கள் சார் ஆட்சியர் விட்டு சென்ற அனைத்து துறை சார்ந்த பணியை தொடர்ந்து துரிதமாக செய்து முடிக்கிறார். பொதுமக்கள் புகார்களை கேட்டு உடனுக்குடன் பதிலளிக்கிறார் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.