உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்து
ஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து
பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்து
பனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து
பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ வேறிடம்
பார்க்கும் பதவியில் ஈடுபாடு மக்களிடம்
இரவுபகல் பாராமல் இட்ட பணியை பார்த்து
இமைகள் மூடாது விழித்ருருக்கும் காத்து
சட்டங்களை கொண்டு குற்றங்களை தடுத்து
சமயோஜித புத்தியால் சட்ட ஒழுங்கை காத்து
இரவுக்குள் திருடும் இதயமற்ற மிருகங்கள்
இன்னொருவர் உடமைகளை கவர்ந்திடும் கள்வர்கள்
உழைப்பவர்களின் உடைமைகளை அபகரிக்கும்
ஈனர்கள் உலகத்தில் ஏச்சிபிழைச்சி ஏய்த்திடும் கூட்டங்கள்
தடுப்பதும் காப்பதும் காவல்துறையின் பணிகள்
தாக்குவதால் விழாது எழுந்திடும் இமயங்கள்
கர்வங்கள் கொண்டவர்களை சமுதாயம் வைக்காது
காவல்துறையின் களப்பணிகள் யாருக்கும் அஞ்சாது
வாளெடுத்து வீசினால் வீழ்ந்திடுமென நினைத்தாயோ
வீழ்ந்தது காக்கியல்ல வாழ்ந்திடும் நீங்கள்தான்