தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பல குற்றவாளிகளை திருட்டு, கஞ்சா, இருசக்கர வாகன திருட்டு போன்ற வழக்குகளில் திறம்பட செயல் பட்டவர். தற்போது பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மனுக்களை இவரே பெற்று இருதரப்பினரையும் வரவழைத்து விசாரித்து தவறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது தி.மி.ஸி பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை இதுபோன்ற குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நன் மதிப்பைப் பெற்று வருகிறார். உதவி ஆய்வாளரின் பணி மேலும் சிறக்க நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் சார்பில் வாழ்த்துக்கள்.