கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15,40,901 ஆண்கள், 15,91,654 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 ஆக மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர்.