தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த கொளக்குடி ஊராட்சி கொளக்குடியில் மயான கொட்டகை முன்பு அடித்த கஜா புயலில் அடியோடு அடித்து செல்லப்பட்டது. அதை இது நாள்வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டித்தரவில்லை.
கிராம முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுவாகவும், நேரிலும் தகவல் தெரியப்படுத்தியும், இதுவரை எந்த பதிலும் இல்லை எனவும், இதுவரை வெயில் காலங்களில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் மழைக்காலங்களில் இறந்த சடலங்களை எரிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், இன்று புத்தாண்டில் ஒருவர் இறந்துவிட்டார். தொடர்ந்து பெய்யும் மழையினால் இறந்தவரின் சடலத்தை எரிக்க முடியாமல் அவதிபடுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் அந்த சடலத்தை எரிக்க தென்னங்கீற்றினால் கொட்டகை அமைத்து சடலத்தை எரிப்பதாகவும், இந்த அவலநிலையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு எங்களுக்கு மயான கொட்டகை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- Dr. வேத குஞ்சருளன்