தஞ்சை மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், ஆவணம் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், மாவட்ட நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அச்சகம் கோ.நீலகண்டன், தலைமை கழக பேச்சாளர் அப்துல்மஜீத், ஏ.சி.சி.ராஜா, சரவணன், பேரூராட்சி பொறியாளர் இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
