புதுக்கோட்டை மாவட்டத்தில் 26.01.2022 ஆம் தேதியன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் அரசு பணியில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். காவலர்களின் அணிவகுப்பை மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு.கோபிநாத் அவர்கள் வழி நடத்த, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.