சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மா.சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவருடைய சொந்தத் தொகுதியிலேயே இந்த அவல நிலை. பல மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் மா.சு. தனது சொந்த தொகுதியில் உள்ள இந்த மருத்துவமனையின் அவலநிலையை கண்டு கொள்வாரா..?
இந்த மருத்துவமனை சுத்தியுள்ள அனைத்து மக்களும் இங்கு வருகிறார்கள். ஆனால் முறையாக எந்தவித மருத்துவ வசதியும் இங்கே இல்லை. பரிசோதிக்க வரும் பெண்களிடம் எல்லாம் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களையும் வெளியே வாங்கிக்கொண்டு வரும்படி வற்புறுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிரசவ நாட்களில் சுகப்பிரசவத்திற்கும் மற்றும் சிசேரியன் பிரசவத்திற்கு இதற்குரிய மருத்துவ உபகரணங்கள் மருந்து எல்லாவற்றையும் வெளியில் தான் வாங்கி தர வேண்டும். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது இந்த மருத்துவமனையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதனால் மருந்துகள் வெளியில்தான் வாங்கி வரவேண்டும் என்று கூறுகின்றனர்.
ஏழைகளின் கண்ணீரை துடைப்பாரா மா.சு..?