தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதன்பட்டவூர் என்ற கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் தென்மாவட்டங்களில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருந்து வரும் இடத்தின் உடைய நில உரிமையாளரிடம் பணம் கொடுத்து அந்த இடத்தை பத்திர பதிவின் மூலம் தனதாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய இங்கு உள்ள கிராம உதவியாளர் மேற்படி ரமேஷ் என்பவர் ஒரு சிலரிடம்பணம் கேட்டதன் பேரில் அந்த நபர்கள் தலா ரூபாய் 5000 வீதம் கொடுத்துள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்ட உடையப்பன் நமக்குக் கொடுத்த செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்டவர் இராமலிங்க கோனார் என்பவரிடம் வாங்கிய 7 சென்ட் இடத்தில் வெறும் 4 சென்ட் இடத்திற்கு மட்டும் பட்டா வாங்கி கொடுத்து மீதமுள்ள 3 சென்ட் இடத்திற்கு பட்டா வாங்க வேண்டுமென்றால் மேலும் ரூபாய் 10,000 (பத்தாயிரம்) வேண்டும் என்று கேட்டு ஓராண்டுக்கு மேல் இழுத்தடித்து வருகிறார் என்பதாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர் மேலும் இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்துதான் ஜீவனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஏற்கனவே ரூபாய் 5000 பிறகு ரூபாய் 2000 ஆக மொத்தம் ரூபாய் 7000 கொடுத்துள்ளார்கள். இருப்பினும் மேலும் பணம் கேட்கும் கிராம உதவியாளர் பணம் தராவிட்டால் பட்டா மாறுதல் செய்து தரமுடியாது என்று மிரட்டுகிறாராம்.
இப்படி ஏழை குடும்பங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கிராம உதவியாளர் மீது கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்விக்கு விரைவில் காலம் பதில் சொல்லும் என்று நம்புவோம் இதுபோன்ற ஊழல் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஏழைகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.