ஜெய்பீம் என்பது இதுவரை
ஊமைக் குரலாக இருந்து உரிமைக் குரலாக மாறிய வீர முழக்கம்!
நீ எழுதினாய் இந்திய அரசியல் சாசனம் உன்னால்தானே உண்டானது உழைக்கும் வர்க்கத்திற்கு விமோசனம்.!!!
நீ பலநாட்டு பட்டங்களைப் பெற்று மேதையானாய் அதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு பாதையானாய்.!!!
நீ இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி நீங்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த
தாரக மந்திரமோ
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்.!!!
அரிவாளால் தீர்வு கண்ட
அடி முட்டாள்களுக்கு எதிராக அறிவால் தீர்வு கண்ட
பௌத்த மதத்தை கடைபிடித்த பொறுமையின் சிகரமே.!!!
நான்தான் உயர்ந்தவன்
நீ தாழ்ந்தவனென்று காட்டுமிராண்டியாக வாழ்ந்த சாத்தான்களுக்கு எதிராக இமாலய சாதனையை படைத்த ஏழைகளின் இதயம் நீ.!!!
தடைக்கற்களை படிக்கற்களாக்கி சோதனைகளை
சாதனையாக்கி
இகழ்ச்சிகளை
புகழ்ச்சியாக்கி
மிருகங்களை
மனிதனாக்கிய
மாமனிதன் நீ.!!!
இவ்வுலகில்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவன் நீ
தலைக்கனம்
இல்லாமல் வாழ்ந்த
தன்மான சிங்கம் நீ.!!!
உலகமே
எதிர்த்த போதும்
உனது கொள்கையில்
உடும்பு பிடியை கொண்டு உறுதியாக இருந்தாய்
முன்மாதிரியாக திகழ்ந்தாய்.!!!
பிற்போக்காக
வாழ்ந்த மனிதர்களுக்கு முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த
சமத்துவ விவசாயி நீ
சமதர்ம தலைவன் நீ
சமூக மருத்துவன் நீ.!!!
இச்சமுதாயம்
கண்மூடி உறங்குவதற்கு
அல்லும் பகலும் பாராமல் எங்களின் அறியாமை
என்கிற இருளை நீக்க
கண்விழித்து
அயராது பாடுபட்ட
ஓய்வில்லா சூரியன் நீ.!!!
ஏழைகளின் ஏணி நீ சமத்துவம்
சகோதரத்துவத்தை
கடைபிடித்த ஞானி நீ
இச்சமூக
மேன்மைக்காக
ஓடி ஓடி உழைத்த
தேனி நீ .!!!
உன் சிலைகளை சேதப்படுத்தி
உனது சாதனையை கொச்சைப்படுத்தி
இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள்
சாதித்த தலைவனான
உன்னை ஜாதி தலைவனாக்கி
புறக்கணிக்கிறார்கள்
உன் புகழ் மேலும் மேலும் மணக்க சந்தனமான
உன்னை மேலும் மேலும் உரசுகிறார்கள்.!!!
ஜெய்பீம் என்பது
உழைக்கும் வர்க்கத்தின் அடையாளம்.!!!
ஜெய் பீம் என்பது விடுதலைக்கான வேட்கை.!!!
ஜெய்பீம் என்பது மனிதனுக்கான
உரிமை முழக்கம்.!!!
ஜெய்பீம் என்பது
சமத்துவ சமுதாயம் உருவாவதற்கான
சமத்துவ பாதை.!!!
ஜெய் பீம் என்பது
சக மனிதனின்
சம உரிமைக்கான போராட்டம்.!!!
ஜெய் பீம் என்பது
சாதாரண வரியல்ல
சக மனிதனின் வலி மட்டுமல்ல
சமத்துவத்திற்கான வழி
மொத்தத்தில்..
ஜெய்பீம் என்பது
இதுவரை
ஊமைக் குரலாக இருந்து உரிமைக் குரலாக மாறிய வீர முழக்கம்!
சமூகப்பற்றாளன்
ஞானசித்தன்
செல்: 7598534851