வயதானாலும் வாழ்க்கையை வாழவைத்து வாழ்பவர்கள்
வருந்தாமல் பாதுகாக்கனும் தொப்புள்கொடி உறவுகள்
வயிற்றில் விதைத்ததை
வாழவைக்க பாடுபட்டு
வணங்காத தெய்வமில்லை ஆளாக்க வேண்டிகிட்டு
குடும்பத்தின் சுமைகளை முழுவதும் தத்தெடுத்து
கொண்டவனின் கேள்விகளுக்கு நாளெல்லாம் விடைகொடுத்து
கணவன் மனைவி அந்தஸ்துக்கு இருவரும் விட்டுகொடுத்து
காலமெல்லாம் உழைப்புதனை சரிசமமாய் பங்கெடுத்து
தாய்தந்தையரின் தகுதிக்கு குழந்தைகளை படிப்பாக்கி
தடம்மாறாத இருமனமும் குடும்பத்துக்கு உரமாக்கி
வாழையடி வாழையாய் வாழ்ந்திடனும் பிள்ளைகள்
விளக்கேத்தும் தீபத்தின் திரிகளாய் பெற்றோர்கள்
உடலையும் உழைப்பையும் உங்களுக்காக கொடுத்தவர்கள்
உள்ளங்கள் வாழட்டும் கடைசிகாலம் முதியவர்கள்
தளர்ந்து தள்ளாடும் முதுமையை தாங்கிக்கனும்
தங்களுக்காக வாழ்ந்திட்ட பெற்றோர்களை பாதுகாக்கனும்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
குற்ற ஆவண பதிவேடு கூடம், தஞ்சாவூர்