கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-.04.-2022 அன்று பள்ளி விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.திராவிட செல்வம் விளையாட்டு விழாவினை கொடியசைத்து துவங்கி வைத்தார். மாலை கழுகு புலிக்காடு ஊராட்சி மன்றத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான திரு பாஸ்கர் அவர்கள் தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பள்ளி சின்னம் வெளியிடப்பட்டு ஆண்டு விழா இனிதே துவங்கியது. பள்ளித் தலைமை ஆசிரியர் பிரீவா வரவேற்புரை நல்கினார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். கல்வி மேலாண்மை குழு தலைவர் செல்வராணி பாஸ்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீர சரவணன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முதல்வன், கழுகு புலிக்காடு ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலமுருகன், அலிவலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆசைத்தம்பி, கழுகு புலிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை தேவந்தி, ஆசிரியர் பயிற்றுநர் சுசித்ரா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இலக்கிய மன்றத் தலைவர் திருமதி முத்துலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் சிலம்பாட்டம், டைவிங் குத்துச்சண்டை, கராத்தே, பிரமிட் சைக்கிள் சாகசங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
