தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் பெரியஏரி, வேம்பன்குளம் பாசன கமிட்டி தலைவர், பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஆதனூர் பெரியஏரிக்கரையை விவசாயிகள் சாலையாக பயன்படுத்தி வந்தனர். நீங்கள் 2015ஆம் ஆண்டு பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவராக பணியாற்றி வந்த காலத்தில் இந்த குளத்துகரை களிமண்ணால் ஆனதினால் மழை நேரங்களில் வாகனங்கள் செல்லவோ, நடந்து செல்லவோ முடியாத சூழ்நிலை இருந்தது. அதனால் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத அந்த குளத்துகரைபாதையை தார்சாலையாக அமைத்து தரவேண்டுமென விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்திருந்தேன். அந்த கோரிக்கையை ஏற்று (2016 ஆம் ஆண்டு) குளத்துக்கரையின் இடையில் மதகுபாலம் அமைத்து தார்சாலை போட்டு கொடுத்தீர்கள். அதுதற்சமயம் மதகுபாலம் உடைந்து சேதமாகிவிட்டது.
விவசாயிகள் வயல்களுக்கு செல்லவும், பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்லவும் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி மதகுபாலத்தை அப்புறபடுத்திவிட்டு காங்கிரிட் பாலமாக அமைத்து தந்து விவசாயிகளின் கஷ்டம் போக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார். அருகில் முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ், அச்சகம் கோ.நீலகண்டன் உடனிருந்தனர்.
–Dr. வேத குஞ்சருளன்