திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் சாலை புது ரோடு அருகில் கடந்த 03.04.2022 கஞ்சா விற்பனைக்காக கடத்தி வந்த தேனி மாவட்டத்தைச் சார்ந்த அருண் (வயது 25) என்பவர் மீது நல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் நான்கு கிலோ அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நல்லூர் காவல் நிலைய ஆய்வாளரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு இ.கா.ப அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டுள்ளார். திருப்பூர் மாநகரில் 2022 ஆம் ஆண்டு இதுவரை 33 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். ஆதலால் திருப்பூர் மாநகரில் குற்றச்செயல்கள் குறைந்து கொண்டே வருகிறது.