தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டினை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி தரும் லீ காலேஜ் ஆப் மார்டியல் ஆர்ட்ஸ் மற்றும் சிலம்பம் மேம்பாட்டு கழகம் சார்பாக மாவட்ட அளவிலான ஏழாம் ஆண்டு சிலம்பப் போட்டி அண்மையில் ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள விளையாட்டு பூங்காவில் நடைபெற்றது. கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முரளி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் தலைமை பயிற்சியாளர் மீனா ராணி ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் மற்றும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆலந்தூர் பா.குணாளன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் இநகழ்ச்சியில் 161 வார்டு மாமன்ற உறுப்பினர் ரேணுகா சீனிவாசன் மற்றும் 163 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் கலாநிதி குணாளன் மற்றும் 163 வது வட்ட கழக செயலாளர் வேலவன் மற்றும் ஆபீசர்ஸ் காலனி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.