பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிடவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல. முழுக்க முழுக்க எழுத்தாளர் கற்பனையே. ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்களை பார்த்தவுடன் நின்ற கமிஷ்னர் “யாரேனும் என்னை சந்திக்க வந்திருக்கிறீர்களா” என்று கேட்டார். வந்திருந்தவர்களுள் சிலர் ஆம் என்று அடையாளப்படுத்திக்கொன்டனர். சற்றும் யோசிக்காமல் “என்னுடைய காலதாமதத்தால் உங்களுடைய நேரத்தை வீணடித்ததற்கும் தங்களை காக்க வைத்ததற்கும் வருந்துகிறேன் என்றார்”. அங்கிருந்த அதிகாரிகளின் கைகள் சல்யூட் அடிப்பதற்கும் பொதுமக்களின் கைகள் வணக்கம் தெரிவிப்பதற்கும் உயர்ந்தது போலவே டிரைவர் ஜானின் வலது கையும் அவரை அறியாமலே அவரின் பண்பிற்கும் சேர்த்து சல்யூட் அடித்துக்கொண்டிருந்தது.
படிக்கட்டு அவரின் எடையை உணர்வதற்குள் முதல் மாடியில் தனது அறை கதவருகே சென்ற கமிஷ்னர் ஒரு நொடி நின்று தனது உதவியாளரை பார்த்து “கீழே Z1 ஸ்டேஷன் டிரைவர் மிஸ்டர் ஜான் இருக்கிறார் அவரை வரச்சொல்லுங்க, கூடவே பொதுமக்கள் ஒருத்தர் ஒருத்தராய் உள்ளே அனுப்புங்க” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றார்.
கீழே, வரவேற்பறையில் இருந்த அதிகாரி ஜானை பார்த்து “சாரி சார் நீங்கள் ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் ஐயா வந்த பரபரப்பில் நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. கொஞ்சம் திருப்பி சொல்லுங்கள்” என்றார்.
காலதாமதமாகி அவசர அவசரமாக வந்ததால் ஜானின் உடல் வியர்வையால் காக்கி உடையில் வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தது. முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே “பரவாயில்லை சார், என் பெயர் ஜான் நான் Z1 ஸ்டேஷன் டிரைவர் என்னை 10 மணிக்குள் கமிஷனர் ஆபீஸ் போக சொல்லி ஸ்டேஷன்ல சொன்னாங்க. ஆனால் வரும் வழியில் ட்ராபிக்கில் சிக்கியதால் லேட்டாகி விட்டது” என்றார்.
“ஒரு நிமிஷம் சார் கேட்டுக்கிறேன், என்ன விஷயம் என்று எதும் சொன்னாங்களா ஸ்டேஷன்ல?” என்று அந்த அதிகாரி ஜானிடம் கேட்டுக்கொன்டிருக்கும்போதே அதிகாரியின் போன் ஒலி எழுப்பியது, போனை எடுத்து “ஹலோ” என்ற அதிகாரியிடம் மறுமுனையில் பேசிய கமிஷ்னரின் உதவியாளர் “சார் Z1 ஸ்டேஷன் டிரைவரை மேலே அனுப்புங்க ரெண்டு நிமிஷத்துக்கு அப்புரம் பப்ளிக்க ஆடர்படி அனுப்புங்க. முதியவர் யாரேனும் இருந்தால் முதலில் அனுப்புங்க’’ என்றார்.
‘’ஓகே சார்’’ என்று போனை வைத்த அதிகாரி ஜானை பார்த்து “சார் நீங்க மேலே போங்க உங்களை கூப்பிடுராங்க’’என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்கினார்.
சற்றும் காலதாமதம் இல்லாமல் ஜானின் கால்கள் படிக்கட்டு நோக்கி நகர தொடங்கியது.
புதிய கமிஷ்னர் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு தனி நாடாகலாம் என்ற காலத்திலே காக்கி உடை உடுத்திய ஜானின் குடும்ப வரலற்றில் மாற்றங்களை அடையாளம் கண்டுகொள்வதிலும் மாற்றங்களுக்கேற்ப பழகிக்கொள்வதிலும் சிரமம் இருந்ததே இல்லை.
கடைசியாக கமிஷனர் அலுவலகத்திற்குள் உலாவி ஆறு மாதங்கள் ஆகியிருந்த போதிலும் அங்கு ஏற்பட்டிருந்த மாற்றங்கள் எதுவும் ஜானின் கண்களில் இருந்து தப்பவில்லை.மற்றவர்களுக்கு வியப்பை தூண்டிய மாற்றங்கள் ஜானின் வியப்பை தூண்ட போராடி தோற்றன.
தன்னை யார் அழைத்தார்கள், தான் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்று ஜானின் ஆழ்மனதில் எழுந்த கேள்வி அவர் படிக்கட்டுகள் ஏறிய எட்டு நொடிகள் மட்டுமே நீடித்தது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் மேலோங்கி சலனமில்லாமல் கமிஷ்னரின் உதவியாளரை நெருங்கினார்.
ஜான் வருவதை பார்த்து கமிஷ்னரின் அறைக்கதவை லாவகமாக சத்தமில்லாமல் பாதி திறந்து மீதியை ஜான் திறப்பதற்காக பிடித்திருந்த உதவியாளர் உள்ளே செல்லுங்கள் என்று செய்கை காட்டினார். ஏசியின் காற்று அறைக்குள் இருந்து தப்பிதால் போதும் என்று பாதி திறந்த கதவின் வழியாக வெளியேறிக்கொண்டிருந்தது மேலும் அது ஜானின் காக்கி சீருடையில் வர்ணம் தீட்டிக்கொன்டிருந்த வியர்வையை இதமாக தாக்கத்தொடங்கியது.
ஒருவழியாக தன்னை கமிஷ்னர்தான் அழைத்திருக்கிரார் என்று அறிந்துகொண்ட ஜான் கதவை திறந்த உதவியாளரை பார்த்து “தேங்ஸ் சார்” என்று கூறிவிட்டு உள்ளே நுழைந்தார்.
( தொடரும்…)