பட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார். நீதியின் நுண்ணறிவு சார்பாக அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இதுவரை இவர் ஆற்றிய பணியை புதிதாக வரும் அதிகாரி மேலும் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பது இந்த சுற்றுவட்டார மக்களின் பொதுவான கருத்தாக இருப்பதோடு இதற்கு முன் இங்கு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு புகழேந்தி கணேஷ் அவர்கள் தனது பணியை சிறப்பாக ஆற்றி போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு என அனைத்தையும் நிலைநாட்டி, குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெற விடாமல் பட்டுக்கோட்டை வட்டத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதன் காரணமாக மீண்டும் திரு புகழேந்தி கணேஷ் அவர்கள் பட்டுக்கோட்டை வட்டம் துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றால் சிறப்பாக இருக்கும் என்பதும் இந்த சுற்றுவட்டார மக்களின் எதிர்பார்பாகவும் இருக்கிறது.