புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் சரகம், ஆவுடையார் பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் த/பெ மீராமைதீன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் பரமக்குடியில் சபா ஆப்டிகல்ஸ் என்ற கடை வைத்து தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 24.04.2022 – ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் வீட்டின் பின்புறமாக வந்து மேற்படி நிஜாம் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரது மனைவி ஆயிஷா பீவியிடம் கத்தியை காட்டி மிரட்டி சுமார் 170 பவுன் நகை மற்றும் ரூ.20,000/- பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக மணமேல்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை கண்டுபிடிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்களின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜெரினா பேகம் தலைமையில் கோட்டைப்பட்டிணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. மனோகரன், மணமேல்குடி காவல் ஆய்வாளர் திரு.சாமுவேல்ஞானம், உதவி ஆய்வாளர்கள் திரு.அன்பழகன், திரு மாரிமுத்து, மற்றும் திரு.பிரபாகரன், திரு. டேவிட் ஆகியோர்கள் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினரின் தொடர்புலன் விசாரணையில் கிடைத்த செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 9 எதிரிகளில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி 8 எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சுமார் 62 பவுன் தங்கம்மற்றும் 188 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.
மேலும் சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள், 2 கத்திகளி, முகக்கவசங்கள் மற்றும் ஒரு கையுறை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட 9 எதிரிகளில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு ஒரு நபர் மட்டும் தேடப்பட்டு வருகிறார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன்விசாரணை செய்து கண்டுபிடித்த மேற்படி தனிப்படையினரின் மாவட்ட காவல் கண்காணிப்பானர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் பாராட்டி வெகுமதி அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.