புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படியும் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதே போல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
Phising ( Share Market) Scam மூலம் பாதிக்கப்பட்ட நபர் NCRP கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரால் உடனே துரித விசாரணை மேற்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் Phising ( Share Market) Scam மூலம் பாதிக்கப்பட்டவரின் ரூ. 80,000/- பணம் மீட்கப்பட்டது.
மேலும் மீட்கப்பட்ட ரூ.80,000/- பணம் பாதிக்கப்பட்டவரான உரியவரிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் 01.06.2022ஆம் தேதி அன்று தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது. மேற்படி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கவும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் பதட்டம் அடையாமல் Toll Free No. 1930–யை தொடர்பு கொண்டு விபரங்கள் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக குற்றவாளிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவரின் இழந்த பணம் மீட்கப்படும் எனவும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக காவல் நிலையத்திற்கு வராமல் www.cybercrime.gov.in என்ற வலைதளம் மூலமாக புகார் அளிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்கள்.