மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய குழுவினர் பூப்பந்து, இறகுபந்து (Shuttlecock), கேரம், மேசை பந்து (Table Tennis), பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான சுழல் கோப்பையை வென்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், இப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் குழுவினரை 31.05.2022 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.