குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக POCSO சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக 5.6.2022 அன்று கோயம்புத்தூர் டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு கோயம்புத்தூரில் உள்ள நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை விருது வழங்கி கௌரவித்தது.
இதுகுறித்து டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்கள் கூறும்போது, “இந்த விருது அங்கீகாரம் சமுதாயத்திற்கு மென்மேலும் சிறப்பாக சேவை செய்ய உதவும். கோயம்புத்தூர் எல்லையில் போக்ஸோ வழக்குகளில் தண்டனைக்காக அயராது உழைக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.