தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மே-12 ந்தேதி சென்னை, திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது.
பத்திரிகை ஆசிரியர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 200 -க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட 350 பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆசிரியர் நமது தமிழ்மண், தலைமை அரசு கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.புகழேந்தி இயக்குனர் சிறைவாசிகள் உரிமை இயக்கம், மூத்த பத்திரிகையாளர்கள் வி.எஸ்.இராமன், எஸ்ஆர்.லக்ஷ்மி நாராயணன் ஆசிரியர் ராக்போர்ட் டைம்ஸ், சிவ.ராஜசேகரன் மாமன்ற உறுப்பினர், சி.எம்.துரை ஆனந்த் சிவகங்கை நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
நமது விழாவிற்கு மாண்புமிகு செய்த்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.
அமர்வு- 1
பத்திரிகையாளர்களின் மூத்த முன்னோடி மகாகவி பாரதியார் திருஉருவ சிலைக்கு முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட குறும்படத்தை தலைமை அரசு கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., அவர்கள் வெளியிட்டார்.
பத்திரிகையாளர்களின் இன்றைய நிலை, எதிர்கால நலன், ஒற்றுமையின் அவசியம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்கள் வி.எஸ்.இராமன், எஸ்ஆர்.லக்ஷ்மி நாராயணன், தோழர் லெலின், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பத்திரிகை சுதந்திர தின விழா, பத்திரிகையாளர்களின் இன்றைய நிலை குறித்தும், வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார்.
பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் விபத்து காப்பீடு வழங்க விண்ணப்பம் வழங்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டது விரைவில் விபத்து காப்பீடு அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுமார் 300 பத்திரிகையாளர்கள் விண்ணப்பம் கொடுத்தனர்.
பத்திரிகை ஆசிரியர்களை பாராட்டும் வகையில் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அமர்வு-2
பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் (ROUND TABLE CONFERENCE) சிறப்பாக நடைப்பெற்றது. பத்திரிகை வெளியிட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை குறித்து தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும், அச்சு ஊடகத்திற்கு உள்ள அச்சுறுத்தல் குறித்தும், தினசரி, வார இதழ்கள், மாத இதழ்களுக்கு உரிய அங்கீகாரம் பெறுவது, அச்சு காகித விலை உயர்வு, அரசு அடையாள அட்டை தொடர்பாகவும், வளர்ந்துவரும் தினசரி மற்றும் பருவ இதழ்களுக்கு பாராமுகம் கட்டுவது குறித்தும், தமிழகத்தில் அதிகரிக்கும் பத்திரிகை தீண்டாமை (சிறிய பெரிய பாகுபாடு) தமிழக அரசின் அனைத்து சலுகையும் தலைமை செயலக நிருபர்கள் முதல் தாலுக்கா நிருபர்கள் வரை கிடைத்திட வழிவகை செய்வது தொடர்பாகவும், நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை பற்றி விரிவாக பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு செய்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.
நமது நிலை, நமது கோரிக்கை, நமது தேவை என்ன என்பதனை முழுமையாக தமிழக அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சென்று நமக்கான நிரந்தர தீர்வை எட்டுவது குறித்தும், அரசு அடையாள அட்டை பெற கடுமையான விதிகளை தளர்த்தி எளிய விதிகள் வேண்டும், பத்திரிகை அச்சடிக்கும் பிரதிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து வெளிவரும் தன்மையின் அடிப்படையில் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும், பத்திரிகை ஆசிரியர்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதும், ஒற்றுமையை தொடர்ந்து பலப்படுத்துவது, பத்திரிகை விற்பனை, விளம்பரம் உள்ளிட்ட வருவாய் தொடர்பான ஆலோசனை, பருவ இதழ்களின் எதிர்கால நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக பயணிப்பது உள்ளிட்ட முக்கிய கருத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டது.
பத்திரிகை ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள், கோரிக்கைள் குறிப்பெடுத்து வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது, செயல்படுவது என தீர்மானம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் நடத்திய காலை 9 மணிக்கு தொடங்கிய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை, பரதநாட்டியம், தேனீர் இடைவேளை தமிழ் ராப் பாடல், பத்திரிகையாளர்கள் கௌரவிப்பு, மதிய உணவு இடைவேளை, பத்திரிகைகள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம், நன்றியுரையுடன் மாலை 5:45 மணிக்கு இனிதே நிறைவுற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் நமது நகரம் எஸ்.சரவணன் தலைமையில், வரவேற்புரை பொதுச்செயலாளர், கோ.சத்யநாராயணன் ஆசிரியர் பீப்பிள் டுடே, முன்னிலை எம்.காமேஷ் கண்ணன் ஆசிரியர் வெற்றியுகம்,
விழா ஒருங்கிணைப்பு..
ஒருங்கிணைப்பாளர் பாடி.பா.கார்த்திக் ஆசிரியர் பேனா முள், துணைத்தலைவர் பி.ராஜன் ஆசிரியர் சட்ட கேடயம், இணை செயலாளர் எம்.கிருஷ்ணவேணி ஆசிரியர் நீதியின் தீர்ப்பு, துணை செயலாளர் கி.வினோத் ஆசிரியர் தர்ம ராஜ்ஜியம், அமைப்பு செயலாளர்கள் விஜயகுமார் ஆசிரியர் விழுதுகள், பி.ஜி.முகுந்தன் ஆசிரியர் மாலை தீபம், அ.சரவணன் ஆசிரியர் மண்ணின் குரல், இளஞ்செழியன் ஆசிரியர் ராஜ கர்ஜனை, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம் ஆசிரியர் விழா முரசு, மஞ்சு நாதன் ஆசிரியர் பல்லவன் முரசு, சரண் ஆசிரியர் தேனை பார்வை, ஹரிகிருஷ்ணன் ஆசிரியர் மக்கள் ராஜபார்வை, செந்தமிழ்செல்வி ஆசிரியர் திராவிட உதயம், சக்திவேல் துணை ஆசிரியர் பரததூண்கள், சி.ராமசந்திரன் ஆசிரியர் ஆரம்பம், எம்.எல்.வீரா ஆசிரியர் மின்னொலி, சீனிவாசன் ஆசிரியர் அதிரடி தீர்ப்பு, குறுங்கை கலைமணி ஆசிரியர் சட்ட களஞ்சியம், ப.புகழேந்தி, தினேஷ், பாஸ்கர், சதீஷ்குமார், இளவரசன், ஸ்ரீராம், விஜயகுமார், வினோத், கிரிதரன், ஈஸ்வரன், முரளி, ஜீவா, மோகன், சரவணன், மோகன், ஞான்ராஜ், சக்திவேல், கார்த்திக், கதிர்வேல், பாலசுப்ரமணியன், சாம்சங் செல்வகுமார், கணேச பாண்டி, சண்முகம், விஜய் சுபாஷ் சந்திரன், மோகன், தேவராஜ், ஜேம்ஸ் பெருமாள் உள்பட்ட தமிழநாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடந்தது.