தாயின் கருவிலிருந்து கழன்றவுடன் பிரியும் உறவு
தந்தையின் வழிகாட்டி பள்ளிவரை செல்லும் பாசஉறவு
திருமணம் வரை இழுத்து செல்லும் தொப்புள்கொடி உறவு
திசைமாறி அழைத்து செல்லும் கூடவந்த உறவு
ஊருக்குள்ளே உலாவிடும் உதவாத மாமாமச்சான் உறவு
உயரந்திட வைக்காது குழிபறித்து குழைந்திடும் உறவு
கணவன் மனைவி உறவாகி இணைந்து
பலபரிட்சை பார்க்கும் உறவு
பாட்டன்பாட்டி பேரன்பேத்தி பாசங்களை
பரவசமாக்கி பழகிடும் உறவு
உறவுகளெல்லாம் உறவுகளெல்ல
உறவுகளாய் உருவானது உணர்வுகளை
உறவுகளாக்கி உறவாடும் உள்ளங்களது
உறவுகளை உயிர்பிக்க உழன்று ஓய்ந்தது
அன்பைத்தேடி உயிர்கள் உள்ளவரை
உறவாடும் உறவுகளின் உறவைத்தேடி
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
குற்ற ஆவண பதிவேடு கூடம், தஞ்சாவூர்