பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல. ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கமிஷ்னர் அறைக்குள் உள்ளே நுழைந்த ஜான் “குட் மார்னிங் சார்” என்று சல்யூட் அடிக்க வலது கையை பாதி உயர்த்துவதற்குள் ஜான் உள்ளே நுழைவதை பார்த்த கமிஷ்னர் எழுந்து நின்று “யஸ், மிஸ்டர் ஜான், கிலாட் டு மீட் யு” என்று கை குலுக்க தனது கையை நீட்டிகொண்டிருந்தார்.
மாற்றங்களுக்கு பழகிப்போனவர் என்றாலும் தன் வாழ்நாளில் இது போல் மரியாதை ஒரு உயர் அதிகாரியிடமிருந்து கிடைத்ததே இல்லை என்ற ஆச்சிரியமும், அதிர்ச்சியும் தாக்கி, மெல்லிய ஏசி காற்றுடன் சன்டைபோட்டுத் தோற்றுக்கொன்டிருந்த வியர்வையை ஜெயிக்க வைத்தது ஜானின் உடல். ஒரு நொடி உறைந்து போன ஜான் சுதாறித்துகொண்டு தனது சல்யூட்டை அடித்துவிட்டு “பிலீஸ் டு மீட் யு சார்” என்று அருகில் சென்று கை குலுக்கினார்.
“சாரி ஜான் 10 மணிக்கு உங்களுக்கு நேரம் ஒதுக்கி இருந்தேன் லேட் ஆகிவிட்டது, பப்ளிக் வெயிட் பன்றாங்க, கோச்சுக்காம கொஞ்ச நேரம் வெயிட் பன்னுங்க பொதுமக்களை பார்த்துவிட்டு உங்களை சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு தனது உதவியாளரை அழைக்கும் மணியை அழுத்தினார் கமிஷ்னர்.
“யெஸ் சார்” என்று மீண்டும் சல்யூட் அடித்து விட்டு இம்முறை உதவியாளர் வரும் முன்பே கதவை தானே திறந்து வெளியே வந்தார் ஜான்.
அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ஜானுக்கு நடப்பவை கனவா இல்லை நினைவா என்று அறிய சற்று நேரமானதால் காலதாமத்திற்கு மன்னிப்பு கேட்ட கமிஷ்னரிடம் தானும் சொன்ன நேரத்தில் வரவில்லை என்று கூற மறந்ததுபோனது சற்று நெருடலாகவும், மன்னிப்பு கேட்காமல் வெளியே வந்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.
அழைப்பு மணி கேட்டு உள்ளே வந்த உதவியாளரிடம் கமிஷ்னர் தன்னை பார்க்க வந்த பொதுமக்களை உள்ளே அனுப்பவும், ஜானை மீட்டிங் நடக்கவிருக்கும் அறைக்கு அழைத்துச்செல்லவும் கட்டளையிட்டார்.
அறையிலிருந்து வெளியே வந்த உதவியாளர் ஜானை பார்த்து “சார் உங்களை கமிஷனர் சார் மீட்டிங் ஹாலில் வெயிட் பண்ண சொன்னார்” என்று கூறியதும், என்ன விஷயம் என்று கேட்டபோது தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு பொதுமக்களை கமிஷனர் அறைக்குள் ஒருவர் பின் ஒருவராக அனுப்ப ஆயத்தமானார் கமிஷ்னரின் உதவியாளர்.
இரண்டாவது தளத்தில் இருக்கும் மீட்டிங் ஹாலை நோக்கி நடக்கத் தொடங்கியபோது ஜானின் கைபேசி சட்டைப்பைக்குள் உறுமியது. கைபேசியை எடுத்த ஜான் தனது மனைவியின் எண்ணைப் பார்த்தவுடன் அழைப்பைத் துண்டித்துவிட்டு படிக்கட்டுகள் ஏறத் தொடங்கினார்.
இரண்டாவது தளத்தை அடையும் போது மீண்டும் கைபேசி உறுமியது. பொதுவாக ஒருமுறை அழைப்பை துண்டித்தால் தன் மனைவி மீண்டும் அழைக்க மாட்டார் என்பது ஜானுக்கு தெரியும். ஆனால் தன் மனைவி மீண்டும் அழைக்கிறார் என்றால் ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்துகொண்டார் ஜான். பாதி படிக்கட்டுகளில் இறங்கி ஜன்னல் ஓரமாக நின்று கொண்டு உருமிக்கொண்டிருந்த கைபேசியில் மனைவியின் அழைப்பை ஏற்று “சொல்லு என்ன விஷயம்” என்றார். மறுமுனையில் பேசிய ஜானின் மனைவி சற்று படபடப்போடு “ஜான், சூசி மயக்கம் போட்டு விழுந்து விட்டது” என்றார். செய்தி கேட்ட மறுநொடி ஜானின் கண்கள் இருட்டிப்போனது. தன் தலையை வலதுபுறமும் இடதுபுறமும் வேகமாக ஆட்டினார் ஆனலும் இருன்ட கண்கள் ஒலி பெறவில்லை. “என்ன சொல்ற டீனா” என்று மீண்டும் கேட்டார் ஜான். அதற்க்கு அவரின் மனைவி “எஸ் ஜான், சூசி மயக்கம் போட்டு விலுந்துவிட்டது டாக்டரை வரச்சொல்லுங்கள்” என்றார். “ஓகே ஓகே பதட்டப் படாதே நான் டாக்டரை உடனே வர சொல்றேன்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டு. டாக்டரின் அலைபேசி எண்ணை எடுத்து போன் செய்தார். எப்போதும் இரண்டொரு நொடிகளில் அழைப்பை ஏற்கும் டாக்டர் இன்று ஏனோ அழைப்பை ஏற்காமல் ஜானை காக்க வைத்தார்.
ஒருவழியாக மூன்று முறை அழைத்ததற்கு பின் அழைப்பை ஏற்ற டாக்டர் போனை எடுத்தவுடன் “சாரி சார் கொஞ்சம் பிஸியா இருந்தேன்’’ என்றார். அதற்கு ஜான் “ பரவால்ல சார் ஒரு சின்ன எமர்ஜென்சி” என்றார். “எமர்ஜென்சியா என்ன விஷயம் சார்” என்று கேட்ட டாக்டரிடம் ஜான் “ஆமா சார். நம்ம சூசி மயக்கம் போட்டு விழுந்துவிட்டது. நீங்க கொஞ்சம் வீடு வரைக்கும் போய் என்னன்னு பார்த்துட்டு எனக்கு போன் பண்ணுங்க” என்றார். “ஓகே சார் நான் இப்போ உடனே போறேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார் டாக்டர்.
தன் மனைவிக்கு மீண்டும் போன் செய்தார் ஜான். “என்ன ஆச்சு டாக்டருக்கு சொல்லிட்டீங்களா” என்று கேட்ட தன் மனைவியிடம், “எஸ் இன்பார்ம் பண்ணிட்டேன் டாக்டர் வந்த பிறகு என்ன ஏது என்று கூப்பிடு” என்று கூறிய ஜான் மீண்டும் ‘‘இல்லை.. இல்லை.. டீனா நான் கூப்பிடும் வரை திரும்ப கூப்பிடாதே. நான் கமிஷனர் ஆபீஸ்ல இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கமிஷனர் கூட மீட்டிங் இருக்கு. வீட்டிற்கு வரும் டாக்டர்கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிடு நானே திரும்ப கூப்பிடுறேன்” என்றார்.
ஜானின் இருண்ட கண்களில் மீண்டும் ஒளி வரவில்லை. மாறாக தலை சுற்றல் வந்தது. மெதுவாக கைப்பிடிகளை பற்றி படியேறிய ஜான் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார். மீட்டிங் ஹாலின் அறைக்கதவை கடக்கும்போது உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அதிகாரி ஒருவர் ஒரு நொடி நின்று “சார் நீங்க?” என்று வினவினர். இருண்ட கண்களோடும் தலைசுற்றலோடும் அந்த அதிகாரி என்ன கேட்டார் என்று காதில் கேட்காமல் “தண்ணீர்” என்று கேட்டவாறே, சுவற்றை பிடித்துக் கொண்டு கீழே உட்காருவதற்காக சுவற்றில் சாய்ந்தார் ஜான்.
சுதாரித்துக்கொண்ட அதிகாரி “சார் சார் என்ன ஆச்சு எந்திரிங்க” என்று கைத்தாங்கலாக ஜானை மீட்டிங் ஹாலுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்து ஒரு கிளாஸ் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வந்து ஜானிடம் “குடிங்க சார்” என்று கொடுத்தார்.
( தொடரும்…)