தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்தப் பகுதியில் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள நீர் தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் விழுந்து உயிர் பலி வாங்கும் நிலையில் உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்தி உயிர் சேதம் தடுக்க வேண்டுமென்றும் புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என செங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஈகை.ஆர்.செல்வம் தஞ்சை கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.