திருச்சி சரக காவல் துணைத்தலைவர் R.சரவண சுந்தர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும் திருச்சி மாநகர துணை ஆணையர் N.அன்பு ஆகியோர் முன்னிலையிலும் 28.06.2022 அன்று பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2082.340 கிலோ கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் 2019 முதல் 2021 வரையிலான பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டியில் தீயிடப்பட்டது.