ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது.
கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி நிர்வாகமும் காவல்துறை மற்றும் நிர்வாகமும் ஓடோடி வந்து ஆறுதல் முகத்தை காட்ட வேண்டும்.
என்னவாக இருந்தாலும் நீதியை நிலை நாட்ட உங்கள் பக்கம் இருக்கிறோம் என்றும் தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.
ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற விஷயங்களை பள்ளி நிர்வாகமும் சரி மற்ற அரசியல் சார்ந்த அமைப்புகளும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
சாமானியர்கள் ஆன இவர்கள் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறார்கள் என்று மிதப்பில் அலட்சியம் காட்டுவார்கள்.
கண்ணீரில் மிதக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக ஆவேசம் அதிகமாகி அதிகமாகி, பல்வேறு தரப்பினரும் போராட்டக் களத்தில் இறங்கிய பிறகு அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த நிலையை எட்டும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு அதன் பிறகு அதிகார முகத்தை காட்டிக் கொண்டு வெளியே வருவார்கள்.
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி பள்ளி மாணவி மர்மச்சாவு விவகாரத்திலும் இதேபோல்தான் தற்போது வன்முறைச் சம்பவங்கள்.
எடுத்த எடுப்பில் வட்டாட்சியர் கூட இறங்கி வர மாட்டார். ஆனால் இப்போது டிஜிபி முதற்கொண்டு நேரடியாக பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். வன்முறை பரவாமல் இருக்க பல பகுதிகளிலும் போலீசாரை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ ஆதாரங்களை வைத்து வன்முறையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஆனால் வன்முறை உருவாகக்கூடும் என்று உளவுத் துறையால் மட்டும் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. வாரே வாவ்..
மாவட்ட அளவிலானஅதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரவர்க்கம் அனைவரையும் கூண்டோடு தூக்கி எறியுங்கள்..