குமாரசாமி சிவகாமியின் மைந்தனே
“கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே !
படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே” !
“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி !
படிக்கும் பிள்ளைகளின் பசியை உணர்ந்தவரே !
இலவச உணவை வழங்கி இன்புற்றவரே !
எளிமைக்கும் நேர்மைக்கும்
எடுத்துக்காட்டாய் விளங்கியவரே !
பதவி சுகம் இல்லாத
பண்பட்ட மானிடனே !
“பெருந்தலைவர்” எனும்பட்டம்
போற்ற வேறு யாருமுண்டோ ?’
மூன்று முறை தமிழக –
“முதலமைச்சராய்” இருந்தும் கூட ;
முழுமையான வீடும் இல்லை!
வசதியாக வாழவுமில்லை!
வாழ்ந்த காலம் எல்லாமே –
வாடகை வீட்டில்தானே !
“கருப்பு காந்தியாக”
காதர் உடுத்தி வாழ்ந்து வந்தாய் !
“கல்வியின் நாயகனாக”
காலமெல்லாம் வாழுகின்றாய் !
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி திருக்கோகர்ணம், புதுக்கோட்டை