புதுக்கோட்டை நகர உட்பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் Sacred Heart Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தன்னிலை மறக்க
தானே வழிய தேடும்
சாபம் போதை!
உணர்வினை மறந்து
உண்மை நிலை மறந்து
கனவுக்குள் காலம்
செல்ல , உயிர்
குடிக்கும் பேய்
ஓடியாடி விளையாடி
சிரித்து மகிழும் வயதில்
ஒரு மூலையில் முடங்கி கிடக்க
எப்படி முடிகிறது?
விஷத்தை அமுதாய்
விழுங்கிட எப்படி முடிகிறது?
நரைவிழுந்து
பல்விழுந்து
தடியூன்றும் முன்னே
பிஞ்சிலேயே பழுத்து
உதிர்ந்துவிட துடிப்பதேன்?
சாதனைகள் காத்துகிடக்க
சரித்திரங்கள் தன்
பக்கங்களை இளைஞனே
உனக்காய் விரித்து வைத்திருக்க
நீ ஏன்
உனக்காய் குழி வெட்டி
நீயாய் விழ ஆசைபடுகிறாய்?
ஏதாவது
ஒரு போதைக்கு எப்போதும்
அடிமையாகாமல்
சுயமாய் மூளையை
சிந்திக்க விடு!
சுதந்திர பூமியில்
போதைக்கு அடிமையாகாமல்
நீ நீயாய் இருந்துவிடு.