தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் 75 வது சுதந்திர தினவிழா சமத்துவத்துடன் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சட்ட உரிமைகள் கழக தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர், முனைவர், வேத.குஞ்சருளன் தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர், ஏ.அப்துல்மஜீது, ஏ.அந்தோணிராஜன், ஆர்.ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சுதந்திர தின கொடியினை ஏற்றி வைத்து, 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வகித்தார்.
விழாவில் கிராம பொறுப்பாளர்கள் ஐ.மார்சிங், எஸ்.எம்.ஏ.அண்ணாதுரை, எஸ்.எஸ்.தாமஸ், அ.அந்தோணிசெல்வராஜ், அ. ஜான்போஸ்கோ, மரஆர்வலர் சுந்தரம், கிராம உதவியாளர் சுரேஷ். பாரதி என்.அமரேந்திரன், செய்தியாளர், த.நீலகண்டன், எஸ்.மரியசவரிநாதன், அ.அமலன், எஸ்.வில்லியேசன், வி.முருகானந்தம், த.டெனிசன்ராஜ், பெண்கள் என பலர் மரகன்றுகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரகன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மும்மதத்தினரும் கலந்துக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அ.அன்பானந்தம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜெஸிலிட்டில்ரோஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று மரியாதை செலுத்தி, சுதந்திர கொடியினை ஏற்றிவைத்தார்.விழாவில் பிரான்சிஸ்,ஆர்தர், ஆசிரியர்கள் மெர்ஸி, ஜோதி, சோபியா, எஸ்ரோலின், கேஸ் நிஸ்வரன் உள்ளிட்ட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிறைவில் ஆசிரியை ஜான்ஸி நன்றி கூறினார்.