பெற்றெடுத்த பெண்களுக்கு ஒரு வாழ்க்கை
பெண்மையில்லா மற்றவருக்கு பல வாழ்க்கை
பிறப்பிற்கு அடையாளம் இல்லற வாழ்க்கை
பிறவிபயன் அடைவதுதான் மனித வாழ்க்கை
முன்னோர்கள் முன்மொழிந்த மூன்று முடிச்சு
மங்கையின் மனதிலே மலர வச்சு
ஊரறிய உலகறிய செய்தியை வச்சு
உறவுகளை உணர்த்துகிற உண்மையை வச்சு
இருவீட்டார்கள் இணைகின்ற மணவறையில்
இணைத்திடுமே மஞ்சள்கயிறு மாங்கல்யம்
ஒருவருக்கு ஒருத்தியாக உள்ளம்பதிச்சு
ஒற்றுமையாய் வாழ்வதற்கு அம்மிமிதிச்சு
தம்பதியராய் குடுபத்தில் தடம்பதிச்சு
தனக்கென்று சமுதாயத்தில் தகுதியவச்சு
வாழ்வாங்கு வாழ்க்கையை வாழ்ந்திட்டு
விடைபெறலாம் தலைமுறைக்கு வழியவிட்டு
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்