
கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது
திருச்சி மாவட்டம், மருதாண்டக்குறிச்சி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மாவட்ட காவல் அலுவலக உதவி எண்ணிற்கு கிடைத்த தகவலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம்,அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விட்ட ஆளவந்தான் நல்லூர் பகுதியில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரியும் அனி பவுல்ராஜ் (50) என்பவரை கைது செய்தவுடன் அவரிடமிருந்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டர், செல்போன், மை, பாதி அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள்-48, அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்-17, அசல் ரூபாய் நோட்டுகள்-11 மேலும், கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கருவிகளையும் கைப்பற்றி அனி பவுல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்
