
அரசு வேலையில் இருந்து கொண்டு
ஜாதி கழகத்தின் பெயரை பயன்படுத்தி
அரசு அதிகாரிகளை மிரட்டும் ஆசிரியர் செல்வன்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த செல்வன் என்பவர் இடையாத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் என்று ஒரு இயக்கத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு அரசு அலுவலர்களை மிரட்டுவது இவருடைய தோரணை.
இவர் பள்ளிக்குச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று தனது வட்டி தொழிலை கரராக செய்து வருவார், இவரை கேள்வி கேட்டால் கேள்வி கேட்கும் தலைமை ஆசிரியர்கள் மீது பி சி ஆர் கேஸ் பயன்படுத்துவார் அல்லது மொட்ட பெட்டிசன் போட்டு பயமுறுத்துவார் இதனாலே இவரை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாவட்ட கல்வி அலுவலர் வரை பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிரட்டி இவர் சுவரொட்டி ஒட்டுவது மற்றும் பல வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவார். இவ்வாறு அதிகாரிகளை மிரட்டி அரசு புறம்போக்கு நிலங்களை தன்பெயரில் பட்டா போட்டு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது, இவர் மீது அப்படி அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பல முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூக வலைதளங்களில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் என மூவர் மீது சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார். இவர்கள் மூவரும் ஒரு மாதத்திற்குள் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பதிவிற்கு காரணம் என்னவென்று விசாரணை செய்யும்போது அத்திவெட்டி கோவில் காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பட்டா வழங்கி போக்குவரத்து செய்யப்படாமல் இருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் குளறுபடிகள் இருக்கும் காரணத்தால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக ஏற்கனவே இருந்த வருவாய் வட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்து வந்ததாகவும் தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது பொறுப்பேற்றிருக்கும் வட்டாட்சியரும் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தை அளவு செய்ய வருவாய் வட்டாட்சியர் தரப்பில் தேதி ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும் ஆனால் அதே தேதியில் வேறு ஒரு இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையினால் காவல்துறை பாதுகாப்பு வழங்க இயலாத நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டதாகவும் நமக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு தரப்பினர் மாற்றுத் தேதி அறிவிப்பதற்க்குள் நீதிமன்றம் நாடி தடை உத்தரவு வாங்கி இருப்பதாகவும் செவி வழி செய்திகள் வந்து சேர்கின்றன.
ஒரு அரசு அதிகாரி அரசுக்கு எதிராக எந்த விதத்திலும் செயல்பட்டு கையொப்பம் இடக்கூடாது என்ற சட்டத்தின் பால் உறுதிமொழி ஏற்று தான் வேலையில் சேருகின்றனர்.
ஆனால் அரசு அதிகாரியாக இருக்கும் செல்வன் அமைதி பேச்சு வார்த்தையில் ஒரு சாரார் சார்பாக கலந்து கொண்டு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றிக்காட்டியுள்ளோம்.
மற்ற அரசுத்துறைகள் போல் இல்லாமல் வருவாய் துறையில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் அன்றைக்கு உண்டான வேலை பலு என்ன என்பது அவர்களுக்கே தெரியாது.
நிலைமை இப்படி இருக்க நில அளவை செய்ய சம்மன் கொடுத்துவிட்டு வராமல் போனதாகவும் கலவரத்தை தூண்டியதாகவும் பட்டுக்கோட்டை ஆதிதிராவிட நலத்துறை அலுவலர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் என்று மூவரையும் கைது செய் என்று கண்டன பதிவு ஒன்றை பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் என்று தான் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின் போர்வையில் சமூக வலைதள பக்கங்களில் செய்திகளை பரப்பி, வருகின்றார் இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார்களா முதன்மை கல்வி அலுவலர் ஆர்.அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர்?.
