சிறுகூடல்பட்டி கண்டெடுத்த திரைப்பட தங்ககட்டி
சிறுவயதில் சிந்தித்ததை எழுதினாய் தூசிதட்டி
கண்மூடும் வேலையிலே கானத்தை தொடங்கினாய்
கண்கள் இரண்டும்தேடும் காதல்வசம் ஆக்கினாய்
காட்டுராணி கோட்டையிலே பட்டுச்சேலை காத்தாட
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து காவேரி கரையிலாட
அச்சம் மடமையென அஞ்சாமையை விரட்டினாய்
அன்றுவந்தது அதேநிலாவென அடித்துக் கூறினாய்
தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடினாய்
தெய்வம்தந்த வீட்டில் கண்ணெதிரே தோன்றினாள்
பாட்டும்நானே பாவமும்நானே பாடியவரை பணித்தாய்
பால்வண்ணம் பருவமகளை இசைத்தமிழில் எழுதினாய்
கோப்பையும் கோலமயிலும் இசைபாடலும் உன்துடிப்பு
கண்ணே கலைமானே பாடலோ கடைசிவடிப்பு
உன்படைப்புகளை எடுத்துரைக்க ஒருநாள் போதுமா
உலகம் பிறந்தது உனக்காகவென பாடட்டுமா
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
கண்ணதாசனின் கட்டில் மெத்தையும் ராகம்தேடும்
- சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல்துணைக்கண்காணிப்பாளர் (ஓய்வு)
