கண்டு கொள்வாரா மாவட்ட ஆட்சியர்?
பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் நகரம் வார்டு Bல் வருவாய் பின் தொடர் பணிகள் (Settlement) 1.8.2024 முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக ஓர் ஆண்டாக C வார்டுக்கு வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று ஏறத்தாழ இறுதி கட்டத்தில் முடிவடையும் தருவாயில் பணிகள் நடைபெற்று வந்தன. வார்டு Bக்கு புதிதாக சார் ஆய்வாளராக பி.ஜான் கென்னடி என்பவரும் வார்டு Cக்கு சார் ஆய்வாளராக கார்த்திக் என்பவரும் 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு வட்டத்துணை ஆய்வாளராக M.ரஞ்சித்குமார் என்பவர் பொறுப்பேற்றார். பட்டுக்கோட்டை நகர நில அளவை பணியை புரோக்கர்கள் சுமார் 25 ஆண்டுகளாக தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகராட்சி நிர்வாகம், பத்திரப்பதிவு துறை மற்றும் நகர நில அளவை என்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை புரோக்கர்கள் இன்று வரை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வார்டு Bக்கு சார் ஆய்வாளராக பொறுப்பேற்ற பி.ஜான்கென்னடி தனது அலுவலகத்திற்குள் எந்த புரோக்கரும் நுழையக்கூடாது. நகர நில அளவை தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்து புரோக்கர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினார். புரோக்கர்கள் கொண்டு வரும் மனுக்களை நிராகரித்து மனுதாரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

இவருக்கு பேராதரவாக வட்டத்துணை ஆய்வாளர் ரஞ்சித்குமார் செயல்பட்டு பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த புரோக்கர்கள் பொய் புகார்கள் அளிப்பதும், ஆட்களை வைத்து மிரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. சர்வேயர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது. ஒவ்வொரு புரோக்கரும் நாள் ஒன்றுக்கு 50000 முதல் 5 லட்சம் வரை மக்களை ஏமாற்றி சர்வேயர் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனை.

Bவார்டில் இருந்து வெளியேற்றப்பட்ட புரோக்கர்கள் Cவார்டில் மொத்தமாக தஞ்சம் அடைந்தனர். அங்கு புரோக்கர்கள் கொடுக்கும் மனுவின் மீது ஸ்தல ஆய்வு செய்யாமலே சார் ஆய்வாளர் கார்த்தி கையெழுத்திட்டு மேல் நடவடிக்கைக்கு அனுப்புவார். வட்டத்துணை ஆய்வாளர் தவறாக கோப்புகளை நிராகரித்து அதுதொடர்பாக விளக்கம் சந்தேகங்களை கேட்டால், சர்வேயர் கார்த்திக் என்பவருக்கு பதிலாக இடைத்தரகர்கள் வினோத் மற்றும் பிரகாஷ் என்பவர்கள் நேரில் சென்று விளக்கம் கொடுப்பார்கள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் புரோக்கர்கள் யாரும் சர்வே ஆபிஸ்க்குள் நுழைய கூடாது. மீறினால் கடும் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க நேரிடும் என்று எச்சரித்து அனுப்பினார். அதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாத கார்த்திக் வழக்கம் போல் புரோக்கர்களோடு இணைந்து பணி செய்தார்.


இந்நிலையில் மாவட்ட உதவி இயக்குநர் நிலஅளவை அவர்கள் திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கோப்பினை ஸ்தல ஆய்வு செய்த போது ஸ்தலத்தை காட்டமுடியாமல் சர்வேயர் கார்த்திக் திணறி இருக்கிறார். கோப்புகளை ஆய்வு செய்ததில் கார்த்திக் என்பவரால் புலத்தணிக்கை செய்யப்படாமல் புரோக்கர்களால் இடம் அளவை செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்ட உதவி இயக்குநர் அவர்கள் C வார்டு Settlement முடிவுற்றதும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட Naksha திட்டத்திற்கு கார்த்திக் என்பவரை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டார். நிர்வாக நலன் கருதி Bவார்டுக்கு சர்வேயராக இருக்கும் ஜான்கென்னடியை Cவார்டுக்கு கூடுதல் பொறுப்பாளராக மாவட்ட உதவி இயக்குநர் நியமனம் செய்தார். அதுமுதல் புரோக்கர்கள் கொதித்து எழுந்தனர். மாவட்ட உதவி இயக்குநர் மீது தவறாக அவதூறு பரப்பும் நோக்கில் இந்த புரோக்கர்கள் பத்திரிகை செய்தி வெளியிட்டனர். ஒருபோதும் புரோக்கர்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று உறுதிகாட்டும் ஜான்கென்னடி மீதும் அவருக்கு துணையாக இருக்கும் பாண்டியராஜன் முதுநிலை வரைவாளர் என்பவர் மீதும் பொய் புகார்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர். வாரத்திற்கு இரண்டு மூன்று மொட்டை பெட்டிசன்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்தாலும் Settlement முடியும் வரை எந்த புரோக்கருக்கும் இடம் இல்லை என்று உறுதியுடன் உள்ளனர்.
போலியான TSLR பதிவுகளை கொண்டு பத்திரபதிவுகள் நடைபெறுகின்றன. நகர சார்ஆய்வாளர்கள் அளிக்க வேண்டிய TSLR பதிவுகளை போலியாக புரோக்கர்கள் போலியான முத்திரைகளை இட்டு தங்களது கையெழுத்தை இட்டு பத்திர பதிவு செய்கின்றனர். பத்திரபதிவு அதிகாரிகள் இதனையும் ஏற்று பத்திரபதிவு செய்கின்றனர். பத்திரபதிவு முடிந்த கையோடு பட்டா மாறுதலுக்கு புரோக்கர்கள் கொண்டு வருகின்றனர். இதனை கூர்ந்து கவனித்த ஜான்கென்னடி பட்டா வழங்க இயலாது. போலியான ஆவணங்களை வைத்து பத்திர பதிவு நடந்துள்ளது. எனவே இதனை ஏற்க இயலாது என்று மனுவை நிராகரித்து நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு விசாரித்தால் இது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. பத்திர எழுத்தர் மற்றும் புரோக்கர்கள் தான் இது தொடர்பான ஆவணங்கள் தேவை. நாங்களே எல்லா பணிகளையும் செய்து விடுகிறோம். பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று எங்களை ஏமாற்றி உள்ளனர் என்று புலம்பும் நிலையில் மக்கள் உள்ளனர்.
கடந்த 8 மாதங்களாக புரோக்களை தனது அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததால் தற்போது நகராட்சி நில அளவை பிரிவு முகாமிட்டுள்ளனர். அங்குள்ள சர்வேயரை மிரட்டுவது, அங்குள்ள சர்வேயர் நில அளவைக்கு சென்றால் பின் தொடர்ந்து செல்வது, பணி செய்யவிடாமல் தடுப்பது போன்று அட்டூழியங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்டத்துணை ஆய்வாளர் ரஞ்சித்குமார் பணியிட மாறுதலில் செல்வதால் புரோக்கர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட புரோக்கர்களை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் தான் சர்வேயர்கள் நிம்மதியாகவும் அர்பணிப்புடனும் வேலை செய்ய இயலும். மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். போலியாக
சார் ஆய்வாளர்கள் கையெழுத்து மற்றும் போலியான தனி வட்டாட்சியர் முத்திரைகளை புரோக்கர்கள் பயன்படுத்தி பத்திரபதிவு செய்வதும் அதனை தொடர்ந்து பட்டா மாற்றம் செய்ய முயற்சி செய்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
