
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற வந்துள்ள துள்ள தமிழ்நாட்டிற்கான இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் டி. புவனேஸ்வரன், டாக்டர் சி. விநோதினி, டாக்டர் எஸ். பிரசாந்த், டாக்டர் எம். சுபதர்ஷினி, ஆர். வெங்கடேஸ்வரன், அம்ருதா எஸ். குமார், டி, மாலதி, கே.எம். கார்த்திக் ராஜா, விவேக் யாதவ், காஞ்சன் சவுத்திரி, கிருத்தி காம்னா, ராகுல் குமார், சேத்ரிமாயும் தீபி சானு ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ. பிரகாஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
