தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்…
தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்… SI F.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் SSI N.கந்தசாமி, SSI.S.கண்ணன் HC1888 K.இளையராஜா, Gri1281 K.சுந்தர்ராமன், Gri 2737 T.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்…
தமக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்து தமிழ்நாட்டில் சென்னை வழியாக தஞ்சாவூருக்கு விற்பனை செய்ய வந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருப்புவனத்தை சேர்ந்த அசார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஆஷிப்ராஜா, தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சஞ்சய், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சதாம் உசேன், மற்றும் மாணிக்கராஜ் ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும்(Tn 52 3256) என்ற எண் கொண்ட லாரி மற்றும் (TN 58 BW 5308) என்ற ஈச்சர் வண்டியையும் பறிமுதல் செய்துள்ளனர், விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மற்றும் ஈச்சர் வண்டி மூலம் கஞ்சா கடத்திய கும்பலை பிடித்த தஞ்சாவூர் சரக தனிபடையினருக்கு அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.