தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தலைமை வகித்தார். தந்தி டிவி செய்தியாளர் த.நீலகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட பத்திரிகையாளர்கள் இரா.பகத்சிங், கு.குணசீலன், வி.சுந்தர்ராஜ், ந.சுந்தர்ராஜ், இரா. ஸ்ரீதர், ந.வேட்டைபெருமாள், எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெ.நீலகண்டன் எழுத்திலும் இயக்கத்திலும் உருவான “கான் என்றொரு போதிமரம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஆவணப்படத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் வெளியிட வட்டாட்சியர் த.சுகுமார், பேரூராட்சி பெருந்தலைவர் திருமதி.சாந்தி சேகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். சிங்காரம், எஸ்.வி.திருஞானசம்பந்தம், அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, அரங்க குணசேகரன், புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி துணை ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ், தினகரன் ஆன்மீகம் பொறுப்பாசிரியர் கிருஷ்ணா, கலாட்டா டாட் காம் முதன்மை செய்தியாளர் அருள்வளன்அரசு உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் இந்திய அஞ்சல் துறையின் கான் உருவம் தாங்கிய அஞ்சல் வில்லை வெளியிடப்பட்டது.
பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழு மிகச் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியை முனைவர் பா.சண்முகப்பிரியா தொகுத்து வழங்கினார்.விழா நிறைவில் முனைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
பத்திரிகையாளர் கா.கான்முகமது அவர்களுக்கு நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்கள்..