தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்செல்வன் (வயது43). இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.
நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நாடியம், பிள்ளையார்திடல், பாலக்கோரை, சாந்தம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் வந்து படித்து செல்கின்றனர். வெகுதூரம் நடந்து வர வேண்டிய சூழலில் பெற்றோர்கள் பலர் வேன் வசதியுள்ள தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பி விடுவதால், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இந்தநிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், மாணவர்கள் சிரமின்றி வர வசதியாக பிரேம் செல்வன் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் மதிப்பில் ஆட்டோ ஒன்றை வாங்கி பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியிடம் வழங்கினார்.
இதில் பேராவூரணி தாசில்தார் சுகுமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துக்கொண்டனர்.