
தஞ்சாவூர் மாவட்டத்தில் 550 கிலோ குட்கா பறிமுதல், 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 24.04.25 – ம் தேதி கும்பகோணம் உட்கோட்டம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில் குமார் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷ் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் மேலக்காவேரி அருகே சந்தேகத்திற்குட்பட்ட நான்கு சாக்கர வாகனத்தை சோதனை செய்ததில் 550 கிலோ குட்கா, 3 தொலைபேசிகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து குற்றவாளிகளான 1. சென்னை, வியாசர் பாடியை சோர்ந்த ரோனக் சிங், 2. ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்மோகித் மற்றும் 3.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரியாத்திடலைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
