செகந்திராபாத்தில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாகராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் சேவை 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம் செகந்தி ராபாத்தில் இருந்து வாராந்திரசிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 07695) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நலகொண்டா, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர், கூடூர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடைந்தது. அங்கிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடு துறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ராமேஸ்வரம் நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அந்த ரெயிலுக்கு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கம், வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ரெயிலில் வந்த அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் அந்தரெயில் மாலை6.25 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றது. வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை, செகந்திராபாத் பகுதிகளுக்கும் செல்ல முடியும்.