சுமார் நூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை கொண்டது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் 1968 முதல் செயல்பட்டு வருகிறது. அறந்தாங்கி முதல் வேதாரண்யம் வரை பரந்து விரிந்த இக்கல்வி மாவட்டம் புதிய வருவாய் மாவட்டங்கள் உருவாகும் போது தனித்தனி கல்வி மாவட்டங்களாக உருவாயின.
தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்வி மாவட்டமானது பட்டுக்கோட்டை நகராட்சி-ஒன்றியம், அதிரை நகராட்சி, மதுக்கூர் பேரூர்-ஒன்றியம் பேராவூரணி பேரூர்-ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
56 மேநிலைப்பள்ளிகளும் 52 உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 55118. பணியாற்றும் ஆசிரியர்களும் ஊழியர்களின் எண்ணிக்கை 2207.
தஞ்சையில் கடைக்கோடி ஊரான கட்டுமாவடியிலிருந்து உழைக்கும் கூலி தொழிலாளர் மக்களின் பிள்ளைகள், அவர்களுடைய பெற்றோர்கள் ஞிணிளி வை பார்க்க தஞ்சைக்கு செல்ல வேண்டிய நிலை குறித்த ஆய்வு செய்ய தவறிவிட்ட தமிழக அரசு உடனடியாக உத்தரவை திரும்ப பெற வேண்டும். பாரம்பரியமான பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையிலேயே செயல்பட வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள நான்கு மாவட்ட கல்வி அலுவலர்களை நிர்வாக வசதிக்காக இருவராக குறைத்துள்ளனர். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகமும், தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு இன்னொரு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகமும் இயங்கப் போவதாக தகவல்கள் வருகிறது.
மாவட்ட கல்வி அலுவலகம் பட்டுக்கோட்டையிலேயே அமையும் பட்சத்தில் பேராவூரணி பட்டுக்கோட்டை ஒரத்தநாடு பகுதி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு மிகுந்த வசதியாக அமையும். நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பது 55000 மாணவர்களுக்கு சிரமமாக பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூருக்கு மாவட்ட கல்வி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவோம் என்று நம்மிடம் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வாயிலாக, பட்டுக்கோட்டையிலேயே மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்வதற்கு பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பமாக இருக்கிறது.
மக்களின் கோரிக்கையை ஏற்று நமது பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கான வழிவகையை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.