கர்வங்கள் தலைக்கேறினால் வருவது கோபம்
கவலைகள் முறுக்கேறினால் முளைப்பது கோபம்
சிரமங்கள் வந்துவிட்டால் வளர்வது கோபம்
சிக்கல்கள் வந்துவிட்டால் சீறுவது கோபம்
கோபங்களை குணமாய் கொண்டாடும் குடும்பங்கள்
கோலங்களாய் அழிந்திடும் வாழ்க்கை வழித்தடங்கள்
கொடுக்கல் வாங்கலில் வேகங்களை விதைக்கும்
கோயில் நிலங்களை கோபங்களால் அபகரிக்கும்
நிலத்தின் பேராசையால் விளைந்திடும் மோதல்கள்
நீர்நிலை அணைகளால் தடுத்திடும் தாகங்கள்
காதலின் கணைகளால் கொலையாகும் பாவங்கள்
காட்டிலும் கடலிலும் எல்லையில் கோபங்கள்
திடீரென தாக்குவது தற்காலிக கோபம்
திட்டமிட்டு பழிவாங்குவது நிரந்தர கோபம்
இன்பங்களை துன்பங்களாக்கும் கோபங்களை கைவிடு
இதயத்தை இனிமையாக்கும் பொறுமையை கையாளு
–சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்