கொண்டக்கணவனை தெய்வமென்று
கொண்டிடும் மனைவி
கண்டப் பெண்களை நாடிச்செல்லும்
அவனொருப் பிறவி
அம்மா அவனொருப் பிறவி
கணவன் வரவை எண்ணி மகிழும்
கன்னியின் நெஞ்சம் அங்கே
கணிகை மார்பில் தலைவன் துயில
துயரமே மிஞ்சும் இரவில்
தனிமையேக் கொஞ்சும்
மலந்தமுல்லை உலர்ந்து போனால்
மணமுந்தான் குறையும்
அவள்யினிய நினைவில் துயரம்
புகுந்தால் இருக்குமோ மகிழ்ச்சி
மனதை உருக்குமே நினைச்சி
ஒன்றுபட்ட அன்பின் உள்ளம்
தெளிந்த நீரோட்டம்
உறவைச்சொல்லி மணமுடிப்பது
வாழ்வே போராட்டம்
தினம் கண்ணில் நீரோட்டம்
இழந்தக் கற்பை பெறுதல் மீண்டும்
இயலுமோப் பெண்கள் அது
இருவருக்கும் பொதுமை என்பதை
மறப்பதோ ஆண்கள்
இதுநீதியோ கூறுங்கள்
கொண்டகணவனை தெய்வமென்று
கொண்டிடும் மனைவி
கண்டபெண்களை நாடிச்செல்லும்
அவனொருப் பிறவி
– சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு
பள்ளத்தான்மனை