திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் 29/09/2022 அன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பொருளாதார குற்ற பிரிவில் நாகர்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. குமரேசன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி. ரோஸ்லின் சேவியோ மற்றும் 04 காவலர்களைக் கொண்டு இப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியான குற்றங்களை விரைவில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வண்ணம் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது.